நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் எம்எல்ஏ., சண்முகவேலு, பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், துரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தவிர, கடலூர் மேற்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த மாநில அம்மா விளையாட்டுக் கழக தலைவரும், கவுன்சிலருமான ஜம்புலிங்கம் தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் மலைக்கோயிலுக்கு வந்து 10க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா வெற்றிபெற வேண்டி மொட்டைஅடித்துக் கொண்டனர். பின்னர் மூலவருக்கு ஜெயலலிதா பெயரில் பூஜைகள் நடத்தி தங்கத்தேர் இழுத்தனர்.