15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புயல் சின்னம் காரணமாக ரயில்கள் தாமதமாக வாய்ப்பு

ஹூட் ஹூட் புயல் காரணமாக சேலம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்கள் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.வி.வெங்கடேசன்

Updated On :11 அக்டோபர் 2014, 12:17 pm

ஹூட் ஹூட் புயல் காரணமாக சேலம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்கள் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.வி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஹூட் ஹூட் புயல் ஆந்திர, ஒடிசா மாநிலங்களைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் மாற்றுப் பாதையின் இரு மார்க்கங்களிலும் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.தன்பாத்தில் இருந்து 11-ம் தேதி புறப்படும் ரயில் (எண் 13351) தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் ஜார்சுகுடா, ராய்பூர், நாக்பூர் வழியாக மாற்றி இயக்கப்படும். ஆலப்புழாவில் இருந்து 10-ம் தேதி புறப்படும் ரயில் (எண் 13352) ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் விஜயவாடா, பலாஷா, நாக்பூர், ஜார்சுகுடா வழியாக மாற்றி இயக்கப்படும்.

அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து 11-ம் தேதி புறப்படும் ரயில் (எண் 22641) திருவனந்தபுரம் - ஷாலிமார் விரைவு ரயில் விஜயவாடா, பலாஷா, நாக்பூர் வழியாக மாற்றி இயக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.