டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் அருகே மூடப்படாத கிணறு ஒன்றில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்

News image
Updated On :12 அக்டோபர் 2014, 12:20 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்புக்குள் ஆக்கியது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் அருகே மூடப்படாத கிணறு ஒன்றில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் அந்த நபர் யாரென்று அறியமுடியவில்லை. 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நீல நிற லுங்கியும், வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். 45 வயதில் யாராவது காணாமல் போய் இருந்தாலோ, அல்லது இவர் குறித்த விவரங்கள் தெரிந்தாலோ ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு 044-27948235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.