நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனிக்கோயிலில் கேரள ஆளுநர் சுவாமி தரிசனம்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தற்போது கேரள மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். இவர் திங்கள்கிழமை பழனி மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். ஈரோடு மாவட்டம்

News image
Updated On :13 அக்டோபர் 2014, 10:02 am

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் கேரள ஆளுநர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வருகைபுரிந்தார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தற்போது கேரள மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். இவர் திங்கள்கிழமை பழனி மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து கார் மூலம் பழனி அடிவாரம் தண்டபாணி நிலையத்திற்கு வந்த ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், எஸ்பி., ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்.  சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் ரோப்கார் மூலம் மலைக்கோயிலை அடைந்த ஆளுநர் சதாசிவம் உச்சிக்கால பூஜையின் போது மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்தார். போகர் சன்னதிக்கும் சென்று வழிபாடு நடத்தினார்.  அவருடன் அவரது மனைவி சரஸ்வதி, மகன் செந்தில், மகள் பூர்ணா மற்றும் குடும்பத்தார் வந்திருந்தனர்.

காலபூஜை முடிந்த பின் திருக்கோயில் சார்பில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம் பிரசாதங்களை வழங்கினார்.  ஆளுநரின் வருகை குறித்து அவரிடம் கேட்டபோது, குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்யவே வந்துள்ளேன்.  நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்றார். ரோப்கார் மூலமாகவே அடிவாரம் வந்தடைந்த ஆளுநர் ஊர் திரும்பினார். 

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், உதவி ஆணையர் மேனகா, காவல்துறை ஆய்வாளர்கள் புகழேந்தி, சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.