சிதம்பரத்தில் கூட்டுறவு மலிவுவிலை பட்டாசு கடை திறப்பு!
சிதம்பரத்தில் கூட்டுறவு மலிவு விலை பட்டாசு கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சிதம்பரத்தில் கூட்டுறவு மலிவு விலை பட்டாசு கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் சிதம்பரம் ரயில்வேகேட் அருகே உள்ள சி.கொத்தங்குடி அலுவலக வளாகதத்தில் கூட்டுறவு மலிவு விலை பட்டாசு கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலிவு விலை பட்டாசு கடையை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் முதல் விற்பனையை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியது: மலிவுவிலை பட்டாசு கடையில் இரட்டைகிளி மற்றும் ஜம்போ பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தரமான பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டை விட இந்த விலை உயர்வு செய்யப்பட்ட 5 சதவீத கூடுதல் விலையை கழித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மலிவு விலை பட்டாசு கடையில் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சரவெடிகள், ராக்கெட் மற்றும் புதிய ரக வெடிகள் உள்ளிட்ட 198 வகை வெடிகள் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கணினி மூலம் பில் வழங்கப்படுகிறது என விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, மேலாண்மை இயக்குநர் எஸ்.துரைராஜ், செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி, மேற்பார்வையாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், விற்பனையாளர்கள் வேல்முருகன், நரசிம்மன், இயக்குநர்கள் எஸ்.நாராயணமூர்த்தி, நடுப்பிள்ளை வி.ராஜரத்தினம், ஏ.பிரேமாவதி, ஆர்.காயத்திரி, எஸ்.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...