மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2 மாநில தேர்தல் வெற்றி: நெல்லையில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து திருநெல்வேலியில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

News image
Updated On :19 அக்டோபர் 2014, 8:29 am

முத்துகுமார்

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து திருநெல்வேலியில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஹரியாணா, மகாராஷ்டிர மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குஎண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அங்கும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இருமாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சந்திப்பில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தனர். அப் பகுதியில் வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் கட்டளை எஸ்.ஜோதி தலைமை வகித்தார். தச்சை மண்டலத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.செந்தில்குமார், மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.வி.குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.