சிதம்பரம் பேருந்து நிலைய கடை மேற்கூரை இடிந்து விழுந்து மூவர் படுகாயம்
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு கடை ஒன்றின் மேற்கூரை காரை இடிந்து விழுந்து மூவர் படுகாயம் அடைந்தனர்.


சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு கடை ஒன்றின் மேற்கூரை காரை இடிந்து விழுந்து மூவர் படுகாயம் அடைந்தனர்.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 22-ம் எண் கடையில் ராஜேந்திரன் ஸ்வீட் ஸ்டால் உள்ளது. இதன் உரிமையாளர் முருகன். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு பேருந்தில் தங்களது ஊகருக்கு செல்வதற்காக நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கலியனூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (43), இவரது மனைவி கலைச்செல்வி (35), மகள் ஜெயஸ்ரீ (18) ஆகிய மூவரும் ஸ்வீட் ஸ்டால் முன்பு நடைபாதையில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 2.30 மணிக்கு திடீரென பேருந்து நிலையக் கட்டட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை பெயர்த்து இவர்கள் மீது விழுந்தது. இதில் சந்திரசேகரன் உள்ளிட்ட மூவரும் படுகாயமுற்றனர். காயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...