மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை விரைந்து அமைத்திட தொடர் முழக்கப் போராட்டம் அறிவிப்பு

சிதம்பரத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட சுவாமி சகஜானந்த மணி மண்டபத்தை விரைந்து அமைத்திட வலியுறுத்தி நவ.3-ம் தேதி சிதம்பரம் காந்திசிலை அருகே தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது என மணி மண்டப ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2014, 5:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட சுவாமி சகஜானந்த மணி மண்டபத்தை விரைந்து அமைத்திட வலியுறுத்தி நவ.3-ம் தேதி சிதம்பரம் காந்திசிலை அருகே தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது என மணி மண்டப ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்புக்குழுக் தூட்டம் நந்தனார் கல்விக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் முன்னிலை வகித்தார். சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் கே.ஆர்.பாலையா, ஜி.மணிவேல், பி.பன்னீர்செல்வம், எம்.சுப்பிரமணியன், நெடுஞ்செழியன், நந்தனார் கல்விக்கழக நிர்வாகிகள் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் (பொறுப்பு) எஸ்.ராமநாதன், இளைய அன்பழகன், டி.கே.எம்.வினோபா, எம்.தாமோதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பி.வாஞ்சிநாதன், பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபம் அமைக்க இருக்கும் தடையை (வழக்கு) நீக்கி விரைந்து மணி மண்டபம் அமைத்திட தமிழகஅரசை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வருகிற நவ.3-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சுவாரி சகஜானந்தாவிற்கு சிதம்பரம் நகரில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என 15-6-2013-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து சிதம்பரம் சீர்காழி சாலையில் நந்தனார் ஆண்கள் பள்ளி அருகே சகஜானந்தா பெயரில் உள்ள இடத்தை தேர்வு செய்து அதிகாரிகள் அரசுக்கு அனுப்பினர்.

மேற்கண்ட இடம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதி ஆகிய இருதரப்பினரும் மேற்கண்ட இடத்தில் மணி மண்டபம் அமைத்திட ஆட்சேபணை இல்லை என்றும், மணி மண்டபம் அமைத்திட 2 ஏக்கர் 5 செண்டு நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க தயாராக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் சமர்பித்துள்ளனர்.

இதனை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மேற்கண்ட இடத்தில் மணி மண்டபம் அமைக்கலாம் என 15-4-2014ல் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் சிதம்பரத்தைச் சேர்ந்த டாக்டர் கே.நடராஜன் மேற்கண்ட இடம் தனக்கு சொந்தமானது, இங்கு மணி மண்டபம் அமைக்கக்கூடாது என கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 4-4-2014ல் வழக்கு தொடுத்துள்ளார்.

 இந்த வழக்கை காரணம் காட்டி மேற்கண்ட இடத்தில் மணி மண்டபம் அமைக்கும் பணி காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வழக்கை விரைந்து முடித்து விரைந்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி இந்த தொடர் முழக்கப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.