ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவி சாவு

சிதம்பரம் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மகள் குணவதி (8). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலுகிறார். இந்நிலையில்

News image
Updated On :23 அக்டோபர் 2014, 2:47 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மகள் குணவதி (8). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலுகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள தாமரைக்குளத்தில் குணவதி குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறி்த்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.