சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்புக்குழுக் தூட்டம் நந்தனார் கல்விக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் முன்னிலை வகித்தார். சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் கே.ஆர்.பாலையா, ஜி.மணிவேல், பி.பன்னீர்செல்வம், எம்.சுப்பிரமணியன், நெடுஞ்செழியன், நந்தனார் கல்விக்கழக நிர்வாகிகள் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் (பொறுப்பு) எஸ்.ராமநாதன், இளைய அன்பழகன், டி.கே.எம்.வினோபா, எம்.தாமோதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பி.வாஞ்சிநாதன், பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.