வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் 106 வீடுகள் இடிந்து சேதம்: ரூ. 2.99 லட்சம் நிவாரணம் அளிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 106 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல்

News image
Updated On :24 அக்டோபர் 2014, 1:59 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 106 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடை பருவத்தில் நெல், வாழைப்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைக்கு இருவர் உயிரிழந்தனர்.  இம்மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டத்தில் 5 வீடுகள் முழுமையாகவும், 18 வீடுகள் பகுதியாகவும், தென்காசி வட்டத்தில் 2 வீடுகள் முழுமையாகவும், 11 வீடுகள் பகுதியாகவும் இடிந்துள்ளன.

அம்பாசமுத்திரம் வட்டம் உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் மழைக்கு இதுவரை 28 வீடுகள் முழுமையாகவும், 78 வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மழைக்கு இறந்த 4 கால்நடைகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 80 ஆயிரமும், உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கு தலா ரூ. 1.50 லட்சமும் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.