மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரத்தில் செல்போன் கடை கூரையை பிரித்து திருட்டு!

சிதம்பரம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் என்.அரவிந்தன் (33). இவர் சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவில் அம்மா செல்போன் கடை வைத்துள்ளார். சனிக்கிழமை இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

News image
Updated On :26 அக்டோபர் 2014, 9:56 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் செல்போன் கடை கூரையை பிரித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் ரொக்கத்தை திருடிச்சென்றனர்.

சிதம்பரம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் என்.அரவிந்தன் (33). இவர் சிதம்பரம் எஸ்.பி.கோயில்தெருவில் அம்மா செல்போன் கடை வைத்துள்ளார். சனிக்கிழமை இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது கடையின் கூரை பிரித்து திருடு போனதாக அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அரவிந்தன் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் மேற்கூரையில் உள்ள ஆஸ்பெஸ்டாஷ் ஷீட்டை பிரித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த உபயோகப்படுத்திய செல்போன்கள் -8, புதிய செல்போன்கள்- 14, நெட்வொர்க்க மோடம்-8 மற்றும் ரொக்கம் ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இதுகுறித்து அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.