கத்தி திரைப்பட சிடிக்களை விற்பனை செய்த இளைஞர் கைது!
சிதம்பரம் லேனா திரையரங்கு மேலாளர் அன்பு. இவர் தனது ஆட்களை கொண்டு நகரில் கத்தி திரைப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்காணித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை


சிதம்பரம் நகரில் அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட புதிய திரைப்படங்களை விற்ற நபரை, திரையரங்கு மேலாளர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சிதம்பரம் லேனா திரையரங்கு மேலாளர் அன்பு. இவர் தனது ஆட்களை கொண்டு நகரில் கத்தி திரைப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்காணித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை ஆனிக்காரன்தெருவில் ஒருவர் கத்தி திரைப்பட சிடி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதனையடுத்து திரையரங்கு மேலாளர் அன்பு மற்றும் ரசிகர் மன்றத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று கத்தி திரைப்படி சிடி விற்பனை செய்த காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகம் (35) என்பவரை பிடித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிந்து, புதிய திரைப்பட சிடிக்கள் விற்ற சண்முகத்தை கைது செய்து அவரிடமிருந்து கத்தி, யாண், பூஜா, அரண்மணை உள்ளிட்ட புதிய திரைப்பட 20 சிடிக்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...