மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சிதம்பரம் மீதிகுடி ரோட்டில் உள்ள பழனியப்பாநகரில் வசிப்பவர் ஸ்ரீதர் (49). கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் இவர் கடந்த அக்.21-ம் தேதி தீபாவளிக்காக வீட்டின் பூட்டிக்

News image
Updated On :27 அக்டோபர் 2014, 1:50 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ஜன்னல் கம்பியை பெயர்த்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது.

சிதம்பரம் மீதிகுடி ரோட்டில் உள்ள பழனியப்பாநகரில் வசிப்பவர் ஸ்ரீதர் (49). கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் இவர் கடந்த அக்.21-ம் தேதி தீபாவளிக்காக வீட்டின் பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று திங்கள்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை பெயர்த்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள், ரொக்கம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

ஜன்னல் கம்பியை பெயர்த்து மற்றொரு வீட்டில் திருட முயற்சி: சிதம்பரம் முத்தையாநகர் அருகே உள்ள தில்லைஅம்மன்நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (60). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வடஇந்திய மாணவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். தீபாவளி விடுமுறைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று திங்கள்கிழமை மாணவர்கள் சிதம்பரம் திரும்பினர். அப்போது வீட்டின் மாடி ஜன்னல் கம்பியை பெயர்த்து மர்மநபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வைத்தியநாதன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.