ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கர்ப்பிணிப் பெண் தற்கொலை

பழனி அருகே ஆர்.வாடிப்பட்டி வேடன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி ருக்குமணி(50).  இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.  மூன்றாவது மகள் வித்யா(20).  இவர் ஆண்டிபட்டி ஒன்றியம்

News image
Updated On :27 அக்டோபர் 2014, 1:47 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே கர்ப்பிணிப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பழனி அருகே ஆர்.வாடிப்பட்டி வேடன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி ருக்குமணி(50).  இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.  மூன்றாவது மகள் வித்யா(20).  இவர் ஆண்டிபட்டி ஒன்றியம் குதிரையாறு அணையை சேர்ந்த நந்தகோபால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  நந்தகோபால் நெய்க்காரபட்டி பேருந்து நிறுத்தம் அருகே முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ளார்.  இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  திருமணமாகி ஒருவருடமான நிலையில் வித்யா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். தீபாவளித்திருநாளின் போது வித்யாவின் பெற்றோர் குதிரையாறு அணைக்கு சென்று மகளுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்கி வந்துள்ளனர்.   நந்தகோபால் தாய்மாமன் மகள் திருப்பூரில் உள்ளதாகவும், அவரை நந்தகோபால் விரும்புவதாகவும் அடிக்கடி வித்யா சண்டைபோட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரடிகூட்டத்தில் உள்ள பெரியம்மா சாந்தா வீட்டுக்கு வந்த போது வித்யா சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அவரை காப்பாற்றி பழனியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ருக்குமணி கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் வழக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.