சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.62 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரைக்கால், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தோரிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.


சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரைக்கால், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தோரிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் கருடப்பாளையத் தெரு சஞ்சீவி மகன் ரமேஷ். இவர் அண்மையில் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதி, தற்போதைய முகவரி காமராஜர் சாலை ரஹ்மத்துல்லா மகன் ஜகபர்சாதிக் (26) என்பவர் சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2011-ம் ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கியதாகவும், வேலைவாங்கித் தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமது தங்கை செல்வி உள்ளிட்ட பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்துவிட்டு, வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் காரைக்காலில் கார் சர்வீஸ் சென்டர் நடத்திவந்து பின்னர் சிங்கப்பூருக்கு தலைமறைவாகிவிட்டதாக புகாரில் கூறியிருந்தார் இதுகுறித்து ஜகபர் சாதிக் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஜகபர் சாதிக் கடந்த சில நாள்களுக்கு முன்பு காரைக்கால் திரும்பினார்.
இதை அறிந்த போலீஸார் அவரை விசாரணைக்காக திங்கள்கிழமை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், சுற்றுலா முறையில் சிங்கப்பூர் சென்றபோது, அங்கு ஷமீரா மற்றும் பிரதீப் என்கிற இருவரின் சந்திப்பு கிடைத்ததாகவும், இவர்கள் மூலம் சிங்கப்பூரில் பலருக்கு வேலை வாங்கித்தர முயற்சி மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார். ரமேஷ் மற்றும் செல்வி தமிழகத்தை சேர்ந்த பொரக்குடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், காரைக்கால் சதீஷ், பார்த்திபன், பாபு, நித்யானந்தம் உள்ளிட்டோரிடம் ரூ.62 லட்சத்து 32 ஆயிரம் வரை பணம் வாங்கியதாகவும், வேலைக்கு அனுப்ப முடியவில்லையெவும் கூறியுள்ளார். இவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த பாஸ்போர்டையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகம், காரைக்கால் பகுதியில் மேலும் பலரிடம் இதுபோன்று பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறாரா என போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...