வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஊழியருக்கு சம்பளம் வழங்காததால் நெல்லையில் அரசு விரைவு பேருந்து ஜப்தி

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக உணவக ஊழியருக்கு நிலுவைச் சம்பளம் வழங்காததால் புதன்கிழமை அரசு விரைவு பேருந்தை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.

News image
Updated On :29 அக்டோபர் 2014, 1:04 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக உணவக ஊழியருக்கு நிலுவைச் சம்பளம் வழங்காததால் புதன்கிழமை அரசு விரைவு பேருந்தை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.

திருநெல்வேலி அருகே நாராயணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (43). இவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக உணவகத்தில் ஊழியராக பணி செய்து வந்தார். 1998 இல் பிரம்மநாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டாராம். இதையடுத்து பிரம்மநாயகம் திருநெல்வேலி தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பிரம்மநாயகத்திற்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். அவருக்கு பின் தொடர்ச்சியாக சம்பளம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நீதின்ற உத்தரவினை அமல்படுத்தவில்லையாம்.

இதனை அடுத்து பிரம்மநாயகம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி பிரம்மநாயகத்திற்கு 2001 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள சம்பளம் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 400 ம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இருப்பினும் பிரம்மநாயகத்திற்கு சம்பளம் வழங்கவில்லையாம். இதனிடையே பிரம்மநாயகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். கருப்பையா, சம்பளத் தொகைக்காக பேருந்தை ஜப்தி செய்யுமாறு கடந்த 11.09.2014 அன்று உத்தரவிட்டார்.

இதையடுத்து புதன்கிழமை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெங்களூரு செல்ல நின்ற விரைவு பேருந்தை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.