நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்: 50 பேர் கைது

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் மொத்தம் 65 இடங்கள் உள்ளன. இதில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டது. மீதமுள்ள 5 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பாமல்  மாணவர்கள் சேர்க்கையை ரத்து

News image
Updated On :30 அக்டோபர் 2014, 9:34 am

சுஜித்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் வியாழக்கிழமை சாலை மறியல் செய்த அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் மொத்தம் 65 இடங்கள் உள்ளன. இதில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டது. மீதமுள்ள 5 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பாமல்  மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்தது. நிர்வாகத்தின்  இந்த முடிவால் இனி வரும் ஆண்டுகளிலும் 60 இடங்களாக குறையும் அபாயம் உள்ளது.

இந்த முடிவை அரசு கைவிட்டு மாணவர்களின் சேர்க்கையை நடத்தி மீதமுளள 5 இடங்களையும் நிரப்ப  வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன்  தலைமையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி காமராஜர் சிலை சதுக்கம் முன்பு  மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.