நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் அணைகளின் நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி
தாமிரவருணி பாசனத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கிய போதிலும் சரிவர பெய்யாததால் எதிர்பார்த்தவாறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம்


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தாமிரவருணி பாசனத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கிய போதிலும் சரிவர பெய்யாததால் எதிர்பார்த்தவாறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் நிகழ் கார் பருவ சாகுபடிக்கு தாமதமாக ஜூலை மாதம் 4 ஆம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் இம்மாவட்டத்தில் முதல் 4 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 18090 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எஞ்சியுள்ள பாளையம் கால்வாய், திருநெல்வேலி கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கவில்லை.
இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-5, சேர்வலாறு அணை-2, கடனாநதி அணை-8, ராமநதி அணை-2, கருப்பாநதி அணை-6, குண்டாறு அணை-18, அடவிநயினார் அணை-20, தென்காசி-2.1, செங்கோட்டை-10. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3231.94 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 190 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 386 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 114 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 60 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 121 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 6 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாசனம், குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணையில் இருந்து 1005 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 45 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தலா 10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம் உயர்கிறது:
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3.40 அடி உயர்ந்து 85.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 102.03 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 3.20 அடி உயர்ந்து 67.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 61.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.30 அடி உயர்ந்து 38.39 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்து 104 அடியாகவும் இருந்தது.
இதேபோல் வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 4 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.62 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 12.50 அடியாகவும் இருந்தது. இம்மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறைவாக இருந்த காரணத்தால் நிகழ் கார் பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா என்ற நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...