நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் இரட்டைக்கொலை தொடர்பாக உறவினர்கள் சாலைமறியல்: போலீஸார் தடியடி

பழனியில் திங்கள்கிழமை இரவு தனியார் மதுபான விடுதி முன்பு இருதரப்பினர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட போது முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை

News image
Updated On :2 செப்டம்பர் 2014, 12:15 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கக் கோரி சாலைமறியல் செய்த உறவினர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது.

பழனியில் திங்கள்கிழமை இரவு தனியார் மதுபான விடுதி முன்பு இருதரப்பினர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட போது முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாளால் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுனர்களாக பாரதிநகர் பகத்சிங் வீதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் உதயக்குமார்(30), தெற்கு அண்ணாநகர் பொன்னுச்சாமி மகன் பாலாஜி(26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். மற்றொருவரான தெற்கு அண்ணாநகரை சேர்ந்த மோகன்குமார் மகன் சதீஸ்குமார்(25) கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கைப்பற்றிய போலீஸார் அடிவாரம் போஸ்டாபீஸ் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் துர்க்கைராஜன்(30), காளிதாஸ்(31), பாட்டாளி தெருவை சேர்ந்த சேதுபதி மகன் பூபாலன்(25), மணி மகன் செந்தில்பாண்டி(22) மற்றும் செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனைவரையும் தேடி வருகின்றனர். 

செவ்வாய்க்கிழமை காலை இறந்த நபர்களின் உடலை வாங்க உறவினர்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்தனர்.  கொலையான இருவரும், காயமடைந்த ஒருவரும் என மூன்று பேரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வார்டு அளவிலான பொறுப்பில் உள்ளனர்.  ஆகவே, ஏராளமான கட்சியினரும் குவிந்திருந்தனர்.  இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்களும், கட்சியினரும் திடீரென திண்டுக்கல் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

இதனால் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து கூட்டத்தைக் கலைக்க போலீஸார் லேசான தடியடியில் ஈடுபட்டனர்.  இதனால் கூட்டம் சிதறி ஓடியது.  இதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.  தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீஸார் அடுத்தடுத்து இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களுடன் மயானத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.  இதனால் பேருந்து நிலையம் பகுதியில் மாலை வரை பரபரப்பு நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.