நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் சிவசேனா சார்பில் வினாயகர் ஊர்வலம். இஸ்லாமியர் வரவேற்பு

பழனியில் செவ்வாய்க்கிழமை சிவசேனா சார்பில் வினாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது இஸ்லாமிய பெருமக்கள்

News image
Updated On :2 செப்டம்பர் 2014, 3:48 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் செவ்வாய்க்கிழமை சிவசேனா சார்பில் வினாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது இஸ்லாமிய பெருமக்கள் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

     பழனியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பிலும், திங்கள்கிழமை இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத் சார்பிலும் வினாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.  நிறைவு நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை சிவசேனா சார்பில் வினாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

அடிவாரம் பாதவினாயகர் கோயில் முன்பு  துவங்கிய ஊர்வலத்தை சிவசேனா சார்பில் மாநில செயலாளர் சந்திரமோகன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் 40 சிலைகள் பங்கேற்றன.  ஊர்வலம் சன்னதிரோடு, பாளையம், பஸ்ஸ்டாண்டு, மார்க்கெட், பெரியகடைவீதி, தேரடி தெப்பக்குளம் வழியாக சண்முகநதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று நீரில் கரைக்கப்பட்டது.

ஊர்வலம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகே வந்த போது முன்னாள் டவுன் தர்மபரிபாலன சங்க செயலாளர் கோட்டை அமீர் ஷாகுல்அமீது தலைமையில் சவுக்கத்அலி, அப்பாஸ், ராஜாமுகமது, சி.சாகுல்அமீது, முகமது அலி, அன்சாரி உள்ளிட்டோர் வந்திருந்து ஊர்வல நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 பதிலுக்கு வினாயகர் சிலை கமிட்டியினரும் காவிதுண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  ஊர்வலத்துக்கு ஏடிஎஸ்பி., சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் சுந்தர்ராஜ்,  வட்டாட்சியர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான வருவாய் துறை அலுவலர்களும் ஊர்வலத்தின் போது கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.