6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பலூன் விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை சாவு 

பெரம்பலூர் அருகே, பலூன் துகள்களை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி புதன்கிழமை உயரிழந்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 2:36 pm

தர்மராஜ்

பெரம்பலூர் அருகே, பலூன் துகள்களை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி புதன்கிழமை உயரிழந்தது.

பெரம்பலூர் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி- பாசமலர் தம்பதியினருக்கு உதயகுமார் (3) மற்றும் பிறந்து 8 மாதத்தில் பிரவின்குமார் ஆகிய குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை குழந்தை உதயகுமார் பலூனை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, பலூன் வெடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து, கிழிந்த பலூன் துகள்களை பிரவின்குமார் விழுங்கி விட்டதாம். 

இதையறிந்த பெற்றோர், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, பிரவின்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.