மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் பா.ஜ.க. மேயர் வேட்பாளர் மனுதாக்கல்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான இடைத்தேர்தல் இம் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 11:22 am

முத்துகுமார்

திருநெல்வேலியில் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் வந்து பா.ஜ.க. மேயர் வேட்பாளர் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான இடைத்தேர்தல் இம் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ஜி.பி.ஆர்.வெள்ளையம்மாள் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுடன் வந்து பா.ஜ.க. மேயர் வேட்பாளர் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தார். மனுவை மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி பெற்றுக்கொண்டார்.

வேட்பாளர் ஜி.பி.ஆர்.வெள்ளையம்மாள் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது கணவர் வி.ஜி.பி.ராஜா, பா.ஜ.க.வின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். மகாராஜநகர் அருகேயுள்ள ஆச்சிமடத்தில் வசித்து வரும் இத் தம்பதிக்கு சக்கரவர்த்தி என்ற மகனும், பிரீத்தி, நிதிஸ்கா ஆகிய மகள்களும் உள்ளனர்.வேட்புமனு தாக்கலுக்கு பின்பு செய்தியாளர்களிடம் ஜி.பி.ஆர்.வெள்ளையம்மாள் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மக்களுக்கு தரமான குடிநீர், சாலைவசதி, கல்வி கிடைக்க பாடுபடுவேன் என்றார்.

சொத்து விவரம்: வெள்ளையம்மாள் தனது கையிருப்பு ரூ.50 ஆயிரம், 400 கிராம் தங்கநகை, தனது கணவர் பெயரில் கையிருப்பு ரூ.1 லட்சம், 100 கிராம் தங்கநகை, 2 வாகனங்கள் உள்பட அசையும் சொத்துக்களாக தனது பெயரில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், தனது கணவர் பெயரில் ரூ.12 லட்சத்து 60 ஆயிரமும் உள்ளதாக உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதுதவிர தனது பெயரில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், கணவர் பெயரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது ம.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.பெருமாள், தே.மு.தி.க. மாநகர் மாவட்டச் செயலர் முகம்மதுஅலி, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கட்டளை ஜோதி, மாவட்டச் செயலர் கார்த்திக்நாராயணன், பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேஷ், அருள்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.