மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பி.காம் மாணவருக்கு 9-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு செவ்வாய்கிழமை இரவு திருமணம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2014, 1:38 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு செவ்வாய்கிழமை இரவு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி-வைத்தியலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 14 வயது மகள் இங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் பக்கத்து வீட்டில் பி.காம். 2-ம் ஆண்டு படிக்கும் கணேஷ்குமார் என்பவர் குடியிருந்து வருகிறார்.

கணேஷ்குமார் மாணவிக்கு மிட்டாய் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்து, தவறாக பழகியுள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம்  கூறியுள்ளார். இதனையடுத்து செவ்வாய்கிழமை இரவு கிராமத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து புதன்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பையையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.