குடிபோதையில் சக இரவு பாதுகாவலரை மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை
குடிபோதையில் சக இரவு பாதுகாவலரை மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த இளைஞருக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்


குடிபோதையில் சக இரவு பாதுகாவலரை மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த இளைஞருக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த கவுண்டன்பாளையம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த இளங்கோ என்ற நடராசன் (31). இவர் கொசப்பாளையத்தில் உள்ள தனியார் வணிகவளாகத்தில் இரவு காவலராக பணிபுரிந்தார். அவருடன் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற கருடனும் (32) காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1.10.2013 அன்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், 2-வது மாடியில் இருந்து இளங்கோவை கீழே தள்ளி விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸôர் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஏ.வேல்முருகன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சக காவலர் இளங்கோவை போதையில் கீழே தள்ளி கொன்ற ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் கே.சண்முகம் ஆஜரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...