நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காஷ்மீர் பேரழிவு: ஒரு மாத ஊதியம் வழங்குவதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அறிவிப்பு

காஷ்மீர் பேரழிவு நிவாரணமாக தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :12 செப்டம்பர் 2014, 9:32 am

சுஜித்குமார்

காஷ்மீர் பேரழிவு நிவாரணமாக தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பூஜ்யநேரத்தின் போது அதிமுக குழு

துணைத் தலைவர் ஆ.அன்பழகன் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் காரணமாக 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில்  மூழ்கியுள்ளன. நாடு முழுவதும் வேதனையை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு  நிவாரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.5 கோடி வழங்கியுள்ளார்.

இதை பின்பற்றி புதுச்சேரி  அரசும் நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.

அதற்காக எனது ஒரு மாத சம்பளத்தை  அரசுக்கு வழங்க தயாராக உள்ளேன். என்றார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓம்சக்தி சேகர், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து  உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.