பண்ருட்டியில் நகை அடக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில் அருகே வசிக்கும் கோத்தம் ராஜ் ஜெயின் என்பவர் தன் வீட்டின் முன் பகுதியில் உள்ள நகை அடகுக்கடை வைத்துள்ளார்.
கடந்த வியாழன் இரவு அன்று மர்ம நபர்கள் சிலர் அந்த கடையின் பூட்டை வெல்டர் மிஷின் வைத்து உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அரை கிலோ வெள்ளி, 2 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 50 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும் லாக்கரை திறக்க முடியாததால் அடகு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின. பண்ருட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு கடையில் நடந்த இந்த திருட்டுச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

