எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுவை முன்னாள் முதல்வர் ப.சண்முகம் செல்போன் முறைகேடாக பயன்படுத்துவதாக  காவல்துறை அதிகாரியிடம் உறவினர் புகார்

புதுவை முன்னாள் முதல்வர் ப.சண்முகத்தின் செல்போனை தனி நபர் பயன்படுத்திவருவதாகவும், இது முறையற்ற செயல் எனவும் காவல்துறை அதிகாரிடம் சண்முகத்தின் உறவினர் புகார் கூறியுள்ளார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2014, 8:06 am

செல்வ முத்துகுமாரசாமி

புதுவை முன்னாள் முதல்வர் ப.சண்முகத்தின் செல்போனை தனி நபர் பயன்படுத்திவருவதாகவும், இது முறையற்ற செயல் எனவும் காவல்துறை அதிகாரிடம் சண்முகத்தின் உறவினர் புகார் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் புதுவை முதல்வராகவும் இருந்தவர் ப.சண்முகம்  காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அவரது சொந்த வீட்டில் வசித்துவந்தார். மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்து 2013-ம் ஆண்டு பிப்ரவர் மாதம் 2-ம் தேதி உயிரிழந்தார்.

இவர் பயன்படுத்தி வந்த செல்போன், இவரது இறப்புக்குப் பிறகு உறவினர்களிடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தின் சகோதரர் திருநாவுக்கரசு மகன் சண்முகம் என்கிற பாலு, காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து சனிக்கிழமை புகார் கூறியுள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது : எனது பெரியப்பா சண்முகம் பயன்படுத்திவந்த சென்போன் (9442400025) அவரது இறப்பு சம்பவத்தைத் தொடர்ந்த பதற்றத்தில் கைப்பற்றமுடியாமல் போய்விட்டது. பிறகு செல்போனை வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இப்போது இந்த போன் தனி நபர் ஒருவர் பயன்படுத்திவருகிறார். உடனடியாக அந்த எண்ணை செயலிழக்கச் செய்யவேண்டும். இந்த போனை உறவினரிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக பயன்படுத்துவதன் மூலம் இந்த போனை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். இந்த போனை பயன்படுத்துபவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.பழனிவேலுவிடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, இப்புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார். புகார் அளித்த பாலுவை தொடர்புகொண்டு கேட்டபோது, . கடந்த 2 நாள்களுக்கு முன்பு எதேச்சையாக மறைந்த சண்முகம் பயன்படுத்திய செல்போன்  எண்ணை தொடர்புகொண்டேன்.  அப்போது ரிங் சென்றது. மறுமுனையில் பேசியவர் ஆனந்தன் என்று கூறினார். செல்போனை உறவினரிடம் ஒப்படைக்காமல், தாங்கள் பயன்படுத்துவது நியாயமற்ற செயல் என கூறியபோது உரிய பதிலை அவர் அளிக்கவில்லை. இந்த செல்போனை பயன்படுத்தியவர் மிகவும் முக்கியமான நபர். இந்த எண் வாங்கும்போது,செல்போன் நிறுவனத்திற்கு அப்போது அளித்த விவரப்படி இப்போதும் சண்முகத்தின் பெயரிலேயே, நெடுங்காட்டில் அவரது வீட்டு முகவரி விவரத்திலேயே தொடர்கிறது. இது தனி நபரிடம் இருந்தால் மோசடி நடக்க வாய்ப்பிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவுள்ளேன். புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் புகார் கூறவுள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.