இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.பழனிவேலுவிடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, இப்புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார். புகார் அளித்த பாலுவை தொடர்புகொண்டு கேட்டபோது, . கடந்த 2 நாள்களுக்கு முன்பு எதேச்சையாக மறைந்த சண்முகம் பயன்படுத்திய செல்போன் எண்ணை தொடர்புகொண்டேன். அப்போது ரிங் சென்றது. மறுமுனையில் பேசியவர் ஆனந்தன் என்று கூறினார். செல்போனை உறவினரிடம் ஒப்படைக்காமல், தாங்கள் பயன்படுத்துவது நியாயமற்ற செயல் என கூறியபோது உரிய பதிலை அவர் அளிக்கவில்லை. இந்த செல்போனை பயன்படுத்தியவர் மிகவும் முக்கியமான நபர். இந்த எண் வாங்கும்போது,செல்போன் நிறுவனத்திற்கு அப்போது அளித்த விவரப்படி இப்போதும் சண்முகத்தின் பெயரிலேயே, நெடுங்காட்டில் அவரது வீட்டு முகவரி விவரத்திலேயே தொடர்கிறது. இது தனி நபரிடம் இருந்தால் மோசடி நடக்க வாய்ப்பிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவுள்ளேன். புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் புகார் கூறவுள்ளேன் என்றார்.