மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா

அறிவுத் திருக்கோவிலில் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாளின் 100-வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2014, 8:38 am

கோ.ஜெயக்குமார்

அறிவுத் திருக்கோவிலில் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாளின் 100-வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் எஸ்.சர்வஜித் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப.வெள்ளை, மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.சஞ்சீவிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பொறுப்பாசிரியர் எஸ்.ராஜேந்திரன் தவம் நடத்தினார். திட்ட அலுவலர் மா.ராமர் வரவேற்றார். செயலாளர் பி.அய்யாச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

போத்தீஸ் தொழில் குழுமத்தின் தலைவர் கே.வி.பி.சடையாண்டி-எஸ்.வேலம்மாள், சட்டப் பேரவை உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டி-பி.சமுத்திரம், தலைமை ஆசிரியர் என்.முருகன்-எம்.லட்சுமி ஆகியோர் மனைவி நல வேட்பு விழவில் சிறப்பு தம்பதியினராக கலந்து கொண்டனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஜி.டி.கணேசன் மனைவி நல வேட்பு உரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவர்கள் தங்களது மனைவிகளுக்கு ரோஜா மலரை அளித்து, இந்த இனிய நாள் முதல் மலர் போன்ற உன் இனிய மனம் வாடாமல் நடப்பேன் என்று உறுதியளித்தனர்.
மேலும் மனைவிகள் தங்களது கணவருக்கு ஆப்பிள் கனி கொடுத்து, இந்த இனிய நாள் முதல் கனி போன்ற உங்கள் மனதை அறிந்து கனிவாக நடந்து கொள்வேன் என்று உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.