நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜம்மு-காஷ்மீர் பேரழிவு: புதுவை அரசு 1 கோடி நிவாரணம்

பலத்த மழை, வெள்ளத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 250-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிவாரண உதவி,

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 12:16 pm

சுஜித்குமார்

ஜம்மு-காஷ்மீர் பேரழிவை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.

பலத்த மழை, வெள்ளத்தால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 250-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிவாரண உதவி, பொருள்களை வழங்கி வருகின்றன.கடந்த வாரம் புதுவை பேரவையில் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில்: காஷ்மீர் பேரழிவுக்காக புதுவை அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது முதல்வர் ரங்கசாமி இதுகுறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.அதன்படி பேரழிவால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு புதுவை அரசு சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.அப்போது முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

காஷ்மீரில் பெரு வெள்ளம் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உறுப்பினர்கள் அன்பழகன், பாலன் ஆகியோர் நிவாரணம் தர வேண்டும் எனக் கோரினர். புதுவை அரசு சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள் விரும்பினால் 1 நாள் சம்பளத்தை அளிக்கலாம் வழங்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.