நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி அருகே கடத்தப்பட்ட சிறுவன் மதுரையில் மீட்பு: கடத்தல்காரர்கள் வட மாநிலத்தவரா?

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி - கடையநல்லூரை அடுத்த வாவாநகரத்தைச் சேர்ந்த கொத்தனார் வன்னியம்பெருமாள் என்பவரின் மகன் மனோ. இவர் அச்சம்புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 5:20 am

மது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி - கடையநல்லூரை அடுத்த வாவாநகரத்தைச் சேர்ந்த கொத்தனார் வன்னியம்பெருமாள் என்பவரின் மகன் மனோ. இவர் அச்சம்புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று ஞாயிறுக் கிழமை பேனா வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு மர்ம கும்பல் அவரைக் காரில் கடத்திச் சென்றது. சாக்கு மூட்டையில் கட்டி கடத்தப்பட்ட அந்தச் சிறுவன் திருப்பரங்குன்றம் பகுதியில் வந்தபோது, திருப்பரங்குன்றம் பூங்கா அருகே சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இரவு என்பதால் அந்தச் சிறுவனை அவிழ்த்து விட்டு கீழே இறங்கி விட்டுள்ளனர். அப்போது அந்தச் சிறுவன் தன்னை ஒரு கும்பல் கடத்தி வருவதாகக் கூச்சலிட்டுள்ளான். அதைக் கேட்ட அக்கம்பக்கத்தவர், கூடியதால், அந்த கும்பல் சிறுவனை விட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர். கடத்தல்காரர்கள் ஹிந்தியில் பேசியதால் அவர்கள் வடமாநிலத்தவரா என்று திருநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.