மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 5 பேரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சித்தாலம்புத்தூரைச் சேர்ந்தவர் க.கருப்பசாமி (34). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சொந்த வேலையாக புறப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர், என்.ஜி.ஓ.ஓ. காலனியைச் சேர்ந்த ஜெய் ஆசீர்வாதம் என்பவரின் மகன் ஜான் கைடு (26) என்பவர் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார். கருப்பசாமி இவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனில் கருப்பசாமியுடன் முன்விரோதம் உள்ள மாரிமுத்து மகன் மைனர்சாமி (26) என்பவருக்கு ஜான் கைடு தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் காலனி இறக்கத்தில் நால்வர் வழிமறித்துள்ளனர். கருப்பசாமியை அனைவரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மா.மைனர்சாமி (26), த.மனோகர் (28), த.நவநீதகிருஷ்ணன் (28), சீ.வைரமுத்து (22), ஜெ.ஜான் கைடு (26) ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.