பள்ளி மாணவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
பாலக்கோடு அருகே தொட்லாம்பட்டியை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தசாமி. இவரது மகள் செவ்வந்தி(15). இவர் பாப்பாரப்பட்டி அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இவரை கடந்த


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வதருக்கு மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பாலக்கோடு அருகே தொட்லாம்பட்டியை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தசாமி. இவரது மகள் செவ்வந்தி(15). இவர் பாப்பாரப்பட்டி அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இவரை கடந்த 5.8.2011-இல் பள்ளியில் விட்டுவிடுவாதக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த மாதப்பன்(47) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வந்தியை அழைத்துச் சென்றார். பின்னர், தொடலாம்பட்டி ஏரிக்கரை அருகே செவ்வந்தியை பலாத்காரம் செய்து கொலை செய்த மாதப்பன் அங்கிருந்த விவசாயக் கிணற்றில் மாணவியின் சடலத்தை வீசிச்சென்றுவிட்டார்.
இது குறித்து, பாலக்கோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், பள்ளி மாணவியை கொலை செய்த மாதப்பனை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கின், மீதான விசாரணை தருமபுரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில், புதன்கிழமை வழக்கை விசாரித்து நீதிபதி மீராசுமதி, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக மாதப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...