மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்கிழமை இரவு, லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2014, 7:59 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்கிழமை இரவு, லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி தலைமை தாங்கினார். அரிமா சங்கத்தின் செயலாளர் வி.ஆர்.எஸ்.செந்தில்கண்ணன், பொருளாளர் பி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் கு.சக்திவேல் வரவேற்றார். லயன்ஸ் பள்ளிக் குழுவின் தலைவர் எஸ்.குணசேகரன் சிறப்பு விருந்தினர் மதுரை தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி டாக்டர் சி.சாந்தலிங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

விழாவில் மாநில நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இரு ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்கம் சார்பில் வட்டார அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு பெற்ற நகர்மன்ற பெருமாள்பட்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எம்.மகேஸ்வரி, செம்பட்டையான்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.கனகாம்மாள், மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.அலுசோடை, ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.வெங்கடாச்சலம், கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த எஸ்.ஞானசௌந்தரி, எம்.டென்னிஸ், லயன்ஸ் பள்ளியைச் சேர்ந்த கே.ஜெயா, வி.நாச்சியார், எம்.முருகேஸ்வரி, ஆர்.சி. பள்ளியைச் சேர்ந்த ஆர்.ராஜமாணிக்கம் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

டாக்டர் சி.சாந்தலிங்கம் சிறப்புரையாற்றினார். விழாவில் லயன்ஸ் பள்ளிக் குழு பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், அரிமா சங்கத்தின் கே.குமாரவேல், எல்.சாத்தப்பன், பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, தணிக்கையாளர் நாஸர், எஸ்.ஆறுமுகம் உள்பட அரிமா சங்க உறுப்பினர்கள், வத்திராயிருப்பு மற்றும் ஏழாயிரம்பண்ணை அரிமா சங்கத்தின் நிர்வாகிகள், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் கே.சக்திவேல், வி.ஆர்.எஸ்.செந்தில்கண்ணன், பி.கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.