21 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படததைக் கண்டித்து சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டைத் தெரு பகுதியில் 21 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்ப்படவில்லை என்று கூறி அப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில்


ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டைத் தெரு பகுதியில் 21 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்ப்படவில்லை என்று கூறி அப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டைத் தெரு பகுதியில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வரவில்லையாம். இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்.சி. தேவலாய சந்திப்பில் (நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில்) காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்று வழியில் பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டது.
நகராட்சியின் குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் அழகேஸ்வரி, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் விநியோகிப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...