டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜமாத்தை விட்டு தள்ளி வைத்த 6 நிர்வாகிகள் மீது வழக்கு

கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், பஞ்சாயத்து தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரேல் மகன் முகமது யூசுப் (51). இவர் கிறிஸ்தவ பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். 17.3.2008-ம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.கூமாப்பட்டியில்

News image
Updated On :20 செப்டம்பர் 2014, 12:30 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜமாத்தை விட்டு ஒருவரை தள்ளி வைத்த, ஜமாத்தின் 6 நிர்வாகிகள் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், பஞ்சாயத்து தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரேல் மகன் முகமது யூசுப் (51). இவர் கிறிஸ்தவ பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். 17.3.2008-ம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.கூமாப்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் முகமது யூசுப் தொழுகை செய்ய வருவது ஜமாத்தின் பொறுப்பாளர்களுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஜமாத்தின் கௌரவத் தலைவர் ம.வாவா ராவுத்தர் (எ) முஸ்தபா ராவுத்தர், கூமாப்பட்டி முஸ்லீம் ஜமாத் தலைவர் பீ.அமீர், பொருளாளர் உ.ஜூயாவுதீன், உறுப்பினர்கள் யூ.இனையத்தல்லா, கோ.பிச்சை, யூ.முகமது நாஸர் ஆகியோர் சேர்ந்து முகமது யூசுப்பை ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளார்கள். மேலும் ஜமாத்தைச் சேர்ந்த யாரும் இவருடன் அன்னம், தண்ணீர் புழங்கங் கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஜமாத்தைச் சேர்ந்த அமானுல்லா முகமது, இப்ராஹிம், சிக்கந்தர் ஆகியோர் முகமது யூசுப்புடன் பேசியுள்ளார்கள். இதனை அறிந்த ஜமாத் நிர்வாகிகள் மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்கள். அபராதத்தை கட்டாததால், மூவரையும் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இது குறித்து முகமது யூசுப், கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் ஜமாத்தின் கௌரவத் தலைவர் உ்ள்ளிட்ட 6 பேர் மீதும் மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.