டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இலங்கை பிரச்னை: ராஜபட்சவுடன் நரேந்திரமோடி பேச வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்

மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.இது தொடர்பாக

News image
Updated On :5 ஜனவரி 2024, 3:56 am

அரவிந்தன்

மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. தற்போது மீனவர் பிரச்னை அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது.காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு இருந்தபோது மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மீனவர்கள் பிடிபட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் புத்தபிட்சுகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற  பின்னர்தான், மீனவர்கள் விடுதலையில் தாமதம் ஏற்பட்டது.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், 100 நாளில் மீனவர்கள் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால் இன்னும் தீர்வு காணப்படவில்லை.தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது வேதனைக்குரியது.

மீனவர் பிரச்னையில் தமிழக பாஜகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆளுக்கொரு கருத்தைச் சொல்கின்றனர். பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் நேரடியாகப் பேசி, மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.