ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவர் அடித்துக் கொலை: மருமகள், பேத்தி கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவரை கம்பால் அடித்துக் கொலை செய்த அவரது மருமகள் மற்றும் பேத்தியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவரை கம்பால் அடித்துக் கொலை செய்த அவரது மருமகள் மற்றும் பேத்தியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூர், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.பெரியகருப்பன் (65). இவரது பெயர், குடும்ப அட்டையில் மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து இருந்துள்ளது. செவ்வாய்கிழமை இரவு பெரியகருப்பன் குடும்ப அட்டையை மகள் பிள்ளை பேத்தியான பாலமுருகன் மனைவி பாக்கியவதி (23), மற்றும் மருமகளான காளிமுத்து மனைவி சுந்தரம்மாள் (33) ஆகியோரிடம் கேட்டுள்ளார். அவர்கள் குடும்ப அட்டையை தர மறுத்து தகராறில் ஈடுபட்டு, கம்பால் பெரியகருப்பனை அடித்துள்ளனர்.
இதில் காயமுற்ற அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேத்தி பாக்கியவதி மற்றும் மருமகள் சுந்தரம்மாளைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...