ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வடகிழக்கு பருவ மழை: வீராணம்ஏரியை ஆய்வு மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கப்படுவதால், வெள்ளம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்,

News image
Updated On :24 செப்டம்பர் 2014, 1:52 pm

ஜி.சுந்தரராஜன்

வடகிழக்கு பருவமழை தொடங்கப்படுவதால், வெள்ளம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கப்படவுள்ளதால், கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காவில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் புதன்கிழமை வீராணம்ஏரி மற்றும் வெள்ளம் சூழக்கூடிய கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கிராமங்களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பாதிக்கப்படும் கிராமங்களில் மணல்மூட்டைகள், படகுகள், ரேஷன் அரிசி ஆகியவை தயார் நிலையில் வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் வீராணம்ஏரி, வடக்குராஜன் வாய்க்கால், வெள்ளாறு ஆகியவற்றில் வெள்ளக்காலங்களில் எவ்வளவு நீர் வரும், எவ்வளவு நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டு தெரிந்து கொண்டார். ஆட்சியருடன் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.