டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவடபத்ரசாயி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் கோவிலின் புரட்டாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.பதியான பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் தலையாயது ஸ்ரீவில்லிபுத்தூர்

News image
Updated On :26 செப்டம்பர் 2014, 9:56 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் கோவிலின் புரட்டாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதியான பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் தலையாயது ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம். இங்கு எம்பெருமான் வடபத்ரசாயி, வடமஹாதாமன், வடபெருங்கோவிலுடையான், பள்ளிகொண்ட பரமஸ்வாமி எனப் பல திருநாமங்களடுன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

ஆழ்வார்களுள் பொங்கும் பரிவாலே பகவானிடம் ஈடுபட்ட பெரியாழ்வார், அழகிய நந்தவனம் அமைத்து இவ்வெம்பெரும்மானுக்கே மாலை கைங்கர்யம் செய்து வந்தார். அவர் தம் திருமகளாய் ஆண்டாள் இத்தலத்தில் அவதரித்து வடபெருங்கோவிலுடையானுக்கு திருப்பாவை என்னும் பாமாலையும் பாடி, பூமாலையும் சூடிக்கொடுத்தாள். எனவேதான் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் திருப்பெயர் ஏற்பட்டது.

ஸ்ரீபெரியாழ்வாரும், ஸ்ரீஆண்டாளும் மங்களாசாசனம் செய்து ஈடுபட்ட வடபெருங்கோவிலுடையானின் புரட்டாசி திருவோண பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.