கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குப்பை தொட்டியில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை இரவு குப்பை தொட்டியில் குழந்தை ஒன்று அழுகுரல் கேட்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இது குறித்து அக்கம்பக்கத்தாரிடம் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து தகவல் அறிந்து சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலுசாமி அப்பகுதி மக்களிடம் இது குறித்து விசாரித்ததோடு அந்த குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் அந்த குழந்தை கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பாலகுண்டராஜா-தெய்வானை தம்பரியரின் குழந்தை என விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் அந்த குழந்தை எப்படி குப்பை தொட்டிக்கு வந்தது என்பது குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிóன்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

