டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டை: 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்

விருதுநகர் மண்டல உதவி வன பாதுகாவலர் ஏ.பழனிராஜூக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர்

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 11:38 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடிய 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மண்டல உதவி வன பாதுகாவலர் ஏ.பழனிராஜூக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு செண்பகதோப்பு சாலையில் உள்ள காளியப்பன் மகன் வீரையா என்பவரது செங்கல் சூளையில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி மகன் வெள்ளைச்சாமி (42), அமாசி மகன் சங்கிலிராஜ் (33) உள்ளிட்ட சிலர் வேட்டையாடிய மான் கறியை பங்கிட்டுக் கொண்டிருந்தனர். வெள்ளைச்சாமி மற்றும் சங்கிலிராஜை வனத்துறையினர் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் அலுவலகம் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் குட்டதட்டி அருகே மானை வேட்டையாடியது தெரிய வந்தது. மேலும் குலாளர் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகாலிங்கம், காளியப்பன் மகன் வீரையா, கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சாத்தன் மகன் கொன்றையாண்டி ஆகியோரும் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களையும் வனத்துறையினர் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வன பாதுகாப்பாளர் பி.கே.அசோக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து அவர் தீர்ப்புக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.