மதுராந்தகம் அருகே கன்னிமங்கலத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது வேன் மோதிய விபத்தில பலத்த காயம் அடைந்து திங்கட்கிழமை இரவு பலியானார்.
மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் பாஸ்கரன் (வயது 21). இவர் கிழக்கு கடற்கரை சாலை சூனாம்பேடு இறால் பண்ணையில் வேலை செய்ய, தனது மோட்டார் சைக்கிளில் வேடவாக்கத்தில் இருந்து வந்தார். பின்னர் தனது ஊருக்கு திரும்பி கன்னிமங்கலம் அருகே வந்தபோது, சித்தாமூரிலிருந்து சூனாம்பேடு நோக்கி வந்த வேன், எதிர்பாராதவகையில் பாஸ்கரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் பாஸ்கரன் தலையில் அடிப்பட்டு, பலத்த காயம் அடைந்தார். உடனே மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திங்கட்கிழமை இரவு இறந்து போனார். விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த டிரைவர் வெற்றிசெல்வனை, சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் கைது செய்தார்.
இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

