மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

சுமை ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த நிலக்கடலை மூட்டை: காவல் நிலையத்தில்  ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வியாழக்கிழமை  சுமை ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த நிலக்கடலை மூட்டையை ஆசிரியர்கள்

News image
Updated On :9 ஏப்ரல் 2015, 3:01 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வியாழக்கிழமை  சுமை ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த நிலக்கடலை மூட்டையை ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளி மாணவர்கள் இலுப்பூர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். 

ராப்பூசல் அரசு  மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு வெளியே நின்று பேசிகொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சுமை ஆட்டோவிலில் ஏற்றி வந்த நிலக்கடலை மூட்டை ஒன்று சாலையில் தவறி விழுந்துள்ளது, இதை கண்ட பள்ளி மாணவர்கள் சத்தம் எழுப்பியள்ளனர். ஆனால் வண்டி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது, பின்னர் மாணவர்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் வேலுச்சாமிக்கு தகவல் அனுப்பி அவரின் உதவியுடன் நிலக்கடலை மூட்டையை இலுப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த நார்த்தாமலை அருகே உள்ள கருப்பாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மாரியப்பனிடம் நிலக்கடலை மூட்டை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.