பழனியில் 12 வார்டுகளுக்கு செயற்கையான குடிநீர் பஞ்சம்
பழனியில் 12க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு நகராட்சி குழாய்கள் சரி செய்யப்படாததால் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.


பழனியில் 12க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு நகராட்சி குழாய்கள் சரி செய்யப்படாததால் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பழனி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் லட்சுமிபுரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைத் தொட்டிகளுக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்துசெட் கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன் சிமெண்ட் பைப்புகள் மூலம் பாலாறு அணையில் இருந்து பழனியில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
இதில் தண்ணீர் அழுத்தம் காரணமாக குழாய்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உடைந்து குடிநீர் வீணானது. இதை தவிர்க்க தற்போது இரும்பு குழாய்கள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி இன்னமும் நிறைவு பெறாத நிலையில் தற்போது பழனி-திண்டுக்கல் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி செய்யப்பட்டு வருவதால் இயந்திரங்களின் அழுத்தம் காரணமாக பழனியாண்டவர் கல்லூரி முன்பு பல பகுதிகளிலும் குழாய்கள் முற்றும் உடைந்து விட்டது. இதனால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பழனி நகரில் 12க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளுக்கும் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதிலும் டிராக்டர் செல்லாத வார்டுகளுக்கும் அவை சென்றதாக பதிவு செய்யப்பட்டு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சாலையில் உடைந்துள்ள குழாய்களை இரும்பு குழாய்களாக மாற்ற நகராட்சி நிர்வாகம் மேலும் பல நாட்கள் ஆகும் என தெரிவித்து பணிகளை மந்த கதியில் செய்து வருகிறது. இதனால் பழனியில் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் இருந்தும் அதை கொண்டு வர முடியாத நிலையில் திருவிழாக்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடைகால விடுமுறை துவங்கி விட்டதால் சுற்றுலாப்பயணிகள் வருகை துவங்கியுள்ளது.
இந்நிலையில் வார்டுகளில் குடிநீர் வினியோகம் சரியில்லாததால் பொதுமக்களிடம் தங்களால் பதில் சொல்லமுடியவில்லை என ஏராளமான கவுன்சிலர்கள் வெள்ளிக்கிழமை பழனி நகராட்சி முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் பணிகளை துரிதப்படுத்தி குடிநீர் வினியோகத்தை சீர் செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து தர்ணை கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...