நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் இளைஞர் கொலை

பழனியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டார்.பழனி சிவகுரு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் அசோக்(20).  இவர் எலெக்ட்ரீசியனாக

News image
Updated On :11 ஏப்ரல் 2015, 9:55 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

பழனி சிவகுரு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் அசோக்(20).  இவர் எலெக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார்.  பழனி ராமர்கோயில் தெருவை சேர்ந்தவர் ராமு மகன் தியாகு என்ற தியாகராஜன்(20).  இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.   இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த சிலமாதம் முன்பு இருவருக்கும் மோதல் ஏற்பட்டு எதிரிகளாக மாறினர்.  இதனால் ருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே அசோக் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த தியாகு குத்தீட்டியால் அசோக் மார்பில் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசோக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். 

இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.