முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

துவாக்குடி அருகே லாரி மீது கார் மோதல்:கட்டட தொழிலாளி சாவு,6 பேர் பலத்த காயம்

திருச்சி துவாக்குடி அருகே பழுதாகி சாலையோரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில்

Updated On :19 ஏப்ரல் 2015, 10:49 am

திருச்சி துவாக்குடி அருகே பழுதாகி சாலையோரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துறையூர் அருகேயுள்ள நரசிங்கபுரம்,வைரசெட்டிப்பாளையம்,மருதபுரம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் ஒரு காரில் நாகூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். மருதபுரம்,புதுத்தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் என்பவர் காரை ஓட்டினர்.

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த போது அங்கு விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்களானது. இதில் பலத்த காயமடைந்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பெரியசாமி(32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வைரசெட்டிப்பாளையம்,முத்துராஜ பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார மனைவி கோகிலா(30),இவரது மகள் சாதனா(6),மருதபுரம் கமாலூதீன் மகன் நிசாருதீன்(13),இவரது சகோதரிகள் ரகமதுநிஷா(22), கஜிதா(6),கார் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து  தகவலறிந்த துவாக்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பெரியசாமியின் சடலத்தையும், இடிப்பாடுகளில் பலத்த காயத்துடன் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.