மு.க. ஸ்டாலின் பக்கம்தான் காங்கிரஸ் இருக்கிறது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப். 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டின் மறைமலைநகரில் இன்று (ஏப்.9) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் ஆங்கிலத்தில் பேச, அவரின் உரையை செல்வப்பெருந்தகை தமிழில் மொழிப்பெயர்த்து கூறினார்.
இந்தக் கூட்டத்தில் சிவக்குமார் பேசுகையில், “என்னுடைய சகோதரும் தமிழ்நாட்டு முதல்வருமான ஸ்டாலினுக்கு என்னுடைய வணக்கங்கள். எங்களின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு, மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எங்கள் (காங்கிரஸ்) கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கர்நாடக துணை முதல்வராக மட்டும் இங்கு வரவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவின் சார்பாகவும், ராகுல்காந்தியின் சார்பாகவும் இங்கு வந்திருக்கிறேன். நான் அனைவரும் ஸ்டாலினுடன் ஒற்றுமையாகக் கைகோர்த்து இருக்கிறோம்.
சகோதரர் ஸ்டாலினின் 5 ஆண்டுகால ஆட்சியை தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். இந்திய நாடே மு.க.ஸ்டாலினை உற்றுநோக்கிப் பார்க்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பாஜக பொறாமைப்படுகிறது” என்றார்.
முன்னதாக, நெல்லையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், “உண்மையான காங்கிரஸ் கட்சி எங்கள் பக்கம்தான் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அதற்கு காங்கிரஸ் தரப்பில் பல்வேறு எதிர்ப்புகள் வலுத்திருந்த நிலையில், சிவக்குமாரும் அதனைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Summary
Karnataka Deputy Chief Minister Shivakumar has stated that the Congress stands with M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டுவில் நிச்சயமாக அணை கட்டுவோம்: டி.கே. சிவக்குமார்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு கே.என். நேரு கண்டனம்

முதல்வர் விஜய்யுடன் போனில் பேசிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



