கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் கர்ப்பிணி பெண்ணான நிரோஷா(23) சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த அயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்-நிரோஷா தம்பதியருக்கு 3 வயது மகன் பிரமோத் உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான நிரோஷா அவரது மகனுடன் கணவர் வினோத்துடன் மோட்டார் சைக்கிளில் அவரது தாய் வீடான காரனோடை அடுத்த சூரப்பட்டுக்கு சென்றார்.
இவர்கள் கவரப்பேட்டையை அடுத்த தச்சூர் கூட்டுச்சாலை அருகே சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணான நிரோஷா சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன் பரிதாபமாக இறந்தார். வினோத்தும் அவரது மகன் பிரமோத்தும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து அறிந்ததும் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிரோஷாவின் உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த கவரப்பேட்டை போலீஸார் கண்டெய்னர் லாரி டிரைவரான மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அமுல் என்பவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

